பாசனத்திற்கு பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் திறப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 September 2022

பாசனத்திற்கு பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் திறப்பு.

சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடையில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசன்னா தலைமை தாங்கினார் விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.


புவனகிரிகிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் மனோகர் கலந்து கொண்டு பாசிமுத்தான் ஓடையில் தண்ணீரை திறந்து வைத்தார், இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி அமைப்பாளர் நடராஜன் துணை அமைப்பாளர் அரவிந்த் சண்முகம் கோபி பொதுபணித்துறை ஊழியர்கள் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பாசிமித்தான் ஓடையில் தண்ணீர் திறப்பால் கீழே மூங்கில் அடி அனுபவப்பட்டு பள்ளிப்படை தில்லைநாயகபுரம் கோவிலாம்பூண்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 8000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment