ராம்தேவி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 September 2022

ராம்தேவி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் ராம்தேவி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


இம்மருத்துவ முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் தங்க செங்குட்டுவன் வட்டார தலைவர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் கலந்து கொண்டு முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்  இம்முகாமில் பொது மருத்துவர் பரணிதரன்  எலும்பு மற்றும் மூட்டுவியல் மருத்துவர்கள் கலந்துகொண்டு முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை ரத்த கொதிப்பு பரிசோதனை உடல் எடை மற்றும் உயரம் பரிசோதனை நாள்பட்ட மூட்டுவலி இடுப்பு வலி போன்றவற்றிற்கு இலவச சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


மருத்துவ முகாமில் இயன்முறை மருத்துவர்கள் டெய்சி, தனுஷ் சத்திய தயாநிதி, நவீன், அன்பரசு ஆகியோர் பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர், ரத்தப்பரிசோதனை நிபுணர் ஜெயஸ்ரீ முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை மேற்கொண்டார். இந்த முகாமில் சேத்தியாதோப்பு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர், மேலும் இந்த முகாம் ஏற்பாடுகளை மருத்துவர் தனுசு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். 

No comments:

Post a Comment