நேரு யுவகேந்திரா மூலம் இளையோர் திருவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 29 September 2022

நேரு யுவகேந்திரா மூலம் இளையோர் திருவிழா.

இந்திய அரசு நேரு யுவகேந்திரா கடலூர் மாவட்டம் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நம் நாட்டின் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடி வரும் இவ்வேளையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் லட்சியங்களையும் மதிப்புகளையும் நினைவு கூறவும் நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் தேசியம் தேசபக்தி மற்றும் நல்லிணக்க உணர்வை மக்களிடையே பரப்பவும் இளம் கலைஞர்களின் படைப்பாற்றலை வெளி கொணரவும் அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டி கௌரவப்படுத்தும் நேரு மகேந்திரா மூலம் இளையோர் திருவிழா நாடு முழுவதும் மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் நடத்த திட்டமிட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக இந்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும் கடலூர் மாவட்ட நேருவேகேந்திரா சார்பாக மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா மற்றும் இந்திய 2047 இளயோர் கலந்துரையாடல் கருத்தரங்கம் நிகழ்ச்சி வரும் 15-10-2022 சனிக்கிழமை காலை 9 மணிக்கு முதல் கடலூர் புனித வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.


இளையோர் திருவிழாவில் உற்சவ குடிமக்களின் கடமை உணர்வு theme of the program scenes of duty among the citysense என்ற மையக்கருத்தினை வலியுறுத்தி இளைஞர்களுக்கான ஓவியம் கவிதை புகைப்படம் எடுத்தல் கைபேசியில் கிராமிய நடனம் குழு இளையோர் கருத்தரங்கு கலந்துரையாடல் போட்டிகள் நடைபெற உள்ளது இப்போட்டிகள் குடிமக்களின் கடமை உணர்வு என்ற மையக்கருத்தை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும் பேச்சு போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும்.


ஓவியம் கவிதை மற்றும் புகைப்படம் எடுத்தல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ 1000 இரண்டாம் பரிசு ரூ750 மூன்றாம் பரிசு ரூ500 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும், இளையோர் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கிராமிய நடனம் குழு முதல் பரிசு ரூ5000 இரண்டாம் பரிசு ரூ2500 மூன்றாம் பரிசு ரூ1250 மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.


இளையோர் கருத்தரங்கு கலந்துரையாடலில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு தல ரூ1500 பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும், நடுவரின் தீர்ப்பே இறுதியானது போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்ப்பு  சான்றிதழ் வழங்கப்படும், மாவட்ட அளவில் ஓவியம் கவிதை மற்றும் புகைப்படம் எடுத்தல் போட்டிகளில் முதல் இடங்களில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.


மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் வெற்றி பெறுவர்கள் முறையை மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க்கலாம் மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவர்கள் முறையே ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் பத்தாயிரம் மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் பரிசாக பெறுவார்கள்.


போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் தகுதியுடைய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவராகவும் வயது வரம்பு 15 முதல் 29 வரை இருக்க வேண்டும் மேற்கண்ட விண்ணப்பித்தினை பெற மற்றும் சமர்ப்பிக்க கடலூர் நேரில் நேரு யுவகேந்திரா எண் 5A சர்க்கரை தெரு இரண்டாவது தளம் புதுப்பாளையம், துர்கா டுடேரியல் அருகில் கடலூர் 1 என்ற அலுவலகத்தில் அணுக வேண்டும் மேலும் தகவல்களுக்கு அலுவலகம், தொடர்புக்கு 0412-293822, இளைஞர் அலுவலர் 7907245013. 

No comments:

Post a Comment