மனுநீதிநாள் முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 29 September 2022

மனுநீதிநாள் முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், கிருஷ்ணங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் நடைபெற்றது மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், இஆப., அவர்கள் முன்னிலையில்  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் 1234 பயனாளிகளுக்கு ரூ.5,54,53,259/- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


முன்னதாக குறிஞ்சிப்பாடி வட்டம், சேராக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் ஆபத்தாரணபுரம் 2-வது கூட்டுறவு நியாயவிலைக்கடையில் மொத்தம் 870 குடும்ப அட்டைகள் உள்ளன, இக்கடையில் இருந்து பொட்டவெளி கிராமத்தில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.00/-இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பகுதி நேர கூட்டுறவு நியாயவிலைக்கடையினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவர்கள் முன்னிலையில் திறந்துவைத்தார். 


இந்த பகுதிநேர நியாயவிலைக் கடையின் மூலம் 182  குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மேலும் தமிழகம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேன்மையடையும் வகையில் பல்வேறு துறைகளின் வாயிலாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.


அவ்வகையில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், அரசு பள்ளிகளில் பயின்ற பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி பயில உதவித்தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதல், நீர் வள ஆதாரங்களை பெருக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகள் தன்னிறைவு அடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இம்மனுநீதிநாள் முகாமில் வருவாய்த்துறை சார்பில் 272 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை ரூ.2,02,05,000/-மதிப்பீட்டிலும், 413 பயனாளிகளுக்கு இணையவழி வீட்டுமனைபட்டா மாற்றத்திற்கான ஆணை ரூ.2,77,20,000/-மதிப்பீட்டிலும், 39 பயனாளிகளுக்கு வருவாய் துறை மூலம் உட்பிரிவு முழுப்புலம் பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை என 350 பயனாளிகளுக்கு ரூ.47,77,000/-மதிப்பீட்டிலும், வருவாய் துறை சார்பில் 51 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு சலவை பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் ரூ.45,724/-மதிப்பீட்டிலும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு ரூ.30,000/- மதிப்பீட்டிலும், வேளாண் துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் ரூ.23,495/- மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உழவு இயந்திரம் மற்றும் மிளகாய் நாற்று கன்றுகள் ரூ.6,81,840/- மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் 13 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி நேரடி கடனுதவி ரூ.19,50,000/- மதிப்பீட்டிலும், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் 4 பயனாளிகளுக்கு கண் கண்ணாடி ரூ.2,000/- மதிப்பீட்டிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு மினரல் மிக்ஸர் ரூ.3,200/- மதிப்பீட்டிலும் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு பயிற்சி உபகரணங்கள் ரூ.15,000/-மதிப்பீட்டில் என ஆக மொத்தம் 1234 பயனாளிகளுக்கு ரூ5,54,53,259/-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


இம்முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரர்களுக்கு தெரியபடுத்தப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற முகாம்களில் பொது மக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கு பெற்று தங்களது தேவைகள் குறித்து மனு செய்து அதற்குரிய தீர்வினை பெற வேண்டும் என தெரிவித்தார்.


இம்முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை போன்ற பல்வேறு துறைசார்ந்த அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது,


இதுபோன்ற அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன் பெறவேண்டும் என தெரிவித்தார். கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி இருப்பின் உடனடியாக முகாம்களுக்கு சென்று தங்களை பரிசோதித்து கொண்டு தகுந்த சிகிச்சை பெற அறிவுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், இஆப.,அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment