ஆன்லைன் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மதுரையை சேர்ந்தவர் கைது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 30 September 2022

ஆன்லைன் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மதுரையை சேர்ந்தவர் கைது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி.

கடலூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில்  கிளிஞ்சிக்குப்பம் நல்லரெட்டிப்பாளையம்  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வாசு த/பெ  வீரப்பன் என்பவர் கொடுத்த புகாரில் தான் கூலி வேலை செய்துவருவதாகவும் கடந்த 5.12.2021 ஆம் தேதி முகநூலில் மதுரை பாண்டியன் என்பவர் சிங்கப்பூர் ஆட்கள் அனுப்புவதாக பதிவினை பார்த்து நான் அவரிடம் தொடர்பு கொண்டபோது கருர் வைசியா வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ள பாரதிராஜா என்பவரது வங்கி கணக்கில் ரூபாய் 1 லட்சம் செலுத்த வேண்டும் என கூறியதால் நான் இருதவணைகளில் ரூபாய் 1 லட்சம் செலுத்தி அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது உமக்கு விசா வந்துவிடும் என கூறினார். ஆனால் எனக்கு விசா ஏதும் வரவில்லை பின்னர் செல்போன் முலம் தொடர்புகொண்டு விசா சம்மந்தமாக கேட்டபோது அவர் எனது ஒனர் பாரதிராஜாவிடம் கேட்டு சொல்கிறேன் என கூறியவர் போனை பிளாக் லிஸ்டி ல் போட்டுவிட்டார்.


பின்னர் நான் மதுரைக்கு நேரில் சென்று விசராணை செய்தபோது சரியான விலாசம் கிடைக்காமல் நான் ஏமாற்றப்படதை உணர்ந்தேன் என்னிடம் ரூபாய் 1 லட்சம் பெற்றுகொண்டு எமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடுத்த புகாரின்பேரில் கடலூர் இணைவழி குற்றபிரிவு காவல் நிலைய கு.எண். 44/2022 பிரிவு 419, 420, IPC r/w 66 D IT Act 2008ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் குற்றவாளியை உடனடியாக கைதுசெய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன்  உத்தரவின்பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். சீனிவாசலு அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, உதவி ஆய்வாளர். அய்யப்பராஜ், மற்றும் சைபர் கிரைம் போலீசார் மதுரை சென்று ஸ்ரீ சாய் எண்டர்பிரைஸஸ் ஹச் ஆர்  பிரஸ் காலனி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டதில் மதுரை மேலூர் கீழவளவை சேர்ந்த முருகேசன் பாண்டியன் (எ)செந்தமிழ் பாண்டியன் (34) த/பெ  தான் மேற்படி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாகவும் இதன் உரிமையாளர் மதுரை சேர்ந்த பாரதிராஜா எனவும் அவரது வங்கி கணக்கில்தான் வாசு என்பவர் பணம் செலுத்தியதாகவும் ஒப்புக்கொண்டதையடுத்து அவரை போலிசார் கைது செய்து ஆன்லைன் மோசடி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட லேப்டாப், கம்பீயூட்டர், 45 பாஸ்போட்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை கைப்பற்றியும் பின்னர் கடலூர் சைபர் கிரைம் காவல் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி பாரதிராஜா தலைமறைவாக உள்ளார் விரைவில் கைது செய்யபடுவார் என்று போலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment