காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குடுபத்தார்கள் மன அழுத்தத்தை போக்கும் நோக்கில் ஒன்று கூடல் நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குடுபத்தார்கள் மன அழுத்தத்தை போக்கும் நோக்கில் ஒன்று கூடல் நிகழ்ச்சி.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர் குடியிருப்புகளில் வசிக்கும் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குடுபத்தார்கள் மன அழுத்தத்தை போக்கும் நோக்கில் ஒன்று கூடல் (Get to Gether) நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து, காவல் குடும்பத்தாரின் பிள்ளைகளின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் வைத்து பரிசளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதின்பேரில், கடலூர் மாவட்டத்தில் உள்ள காவலர் குடியிருப்புகளில் காவல் குடும்பத்தாருக்கு ஓட்டப்பந்தயம், கோல போட்டி, கோ கோ, கயிறு இழுத்தல் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போன்ற சிறு சிறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.


விருத்தாச்சலம் காவலர் குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர்  அங்கித் ஜெயின்  பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.


கடலுார் புதுநகர், திருப்பாதிரிபுலியூர் காவல் குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலுார் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் அவர்கள் பங்கேற்று பரிசுகள் வழங்கினார். திட்டக்குடி காவலர் குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி. K.V. காவ்யா அவர்கள் பங்கேற்று பரிசுகள் வழங்கினார். 


மேலும் கடலுார் முதுநகர், கடலுார் துறைமுகம், சிதம்பரம் டவுன், புவனகிரி, பண்ருட்டி, காடாம்புலியூர், ஆகிய காவலர் குடியிருப்புகளில் ஆய்வாளர்கள் தலைமையில் விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் காவலர் அதிகாரிகள் காவல் குடியிருப்புகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தனர். அப்போது குடிநீர், தெருவிளக்கு பிரச்சனை அனைத்தும் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனவும், குடியிருப்பு பகுதியை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், படிக்கும் மாணவர்கள் சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும் காவலர் குடும்பத்தாரின் பிள்ளைகள் எல்லா வகையிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியும் நிகழ்ச்சி சிறப்பிக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சிகள் மூலம் காவலர் குடியிருப்புகளில் உள்ள குடும்பத்தார் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் காணப்பட்டனர். 

No comments:

Post a Comment