உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்விளக்குகள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 September 2022

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்விளக்குகள்.

வடலூர் நகராட்சிக்குட்பட்ட வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியிலிருந்து விருதாச்சலம்  கடலூர் ஆகிய சாலைகளில் நடுவே நகராட்சி நிர்வாகம் சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.


மின் விளக்குகளில் கீழ்ப்பகுதியில் மின்விளக்குகளை இயக்கும் சுட்சுசகள்களைக் கொண்ட பெட்டிகள் அமைக்கப்பட்டு மின் விளக்கை ஆன் ஆஃப் செய்யப்படுகிறது இந்த பெட்டிகள்  அனைத்தும் திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் இச்சாலைகளை கடந்து தினமும் பயனித்து வருகின்றனர்.


இந்நிலையில் பெட்டிகள் திறந்த நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது எனவே நகராட்சி நிர்வாகம் இதன் மீது கவனம் கூர்ந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற வகையில் உள்ள மின் இணைப்பு பெட்டிகளை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment