பசுமை தமிழகம் இயக்கம் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 September 2022

பசுமை தமிழகம் இயக்கம் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.

பசுமை தமிழகம் இயக்கத்தின் முன்னெடுப்பு பணிகளாக கடலூர் மாவட்டத்தில் பெருமளவில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேற்று (24.9.2022) பசுமை தமிழகம் இயக்க துவக்க நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் வாயிலாக 24/9/2022 முதல் 01/10/2022 வரை பெருமளவில் மரக்கன்றுகள் நடுதல் பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் உத்தேசிக்கப்பட்டுள்ளவாறு 4,30,330 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதன் தொடர் நிகழ்வாக பண்ருட்டி வட்டம், பாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு இத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார், தொடர்ந்து கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தவெளி குளக்கரைகளில் பெருமளவில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) /திட்ட இயக்குனர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுந்தரிராஜா,ஆணையர் நவேந்திரன் துணை மேயர் .பா.தாமரைச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் பிரசன்னா, பரணிமுருகன், சாய்துனிசா சலீம்,சங்கீதாவசந்த், செந்தில்குமாரி இளந்திரையன், ராஜலட்சுமி சங்கர்தாஸ், சுதா  அரங்கநாதன் த.சங்கீதா, புஷ்பலதா நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி பொறியாளர் புன்னியமூர்த்தி மாணவரணி கே.எஸ். ஆர்ர. பாலாஜிஆகியோர் மரக்கன்றுகள் நடுதல் பணியினை மேற்கொண்டனர். இந்நிகழ்வில்  துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment