அண்ணா நகர் சிறுவர் பூங்காவில் மின்கம்பம் உடைந்து விழும் அபாயம்; உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 September 2022

அண்ணா நகர் சிறுவர் பூங்காவில் மின்கம்பம் உடைந்து விழும் அபாயம்; உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் சிறுவர் பூங்காவில் இருக்கும் உயர் மின்னழுத்த கம்பமும் அதன் அருகில் இருக்கும் மின் கம்பமும் உடைந்து விழும் அபாயம், பூங்காவில் சிறுவர்கள் விளையாட அச்சம். குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மற்றும் மின்சாரத்துறை நிர்வாகமும் இரு துறையும் சம்பந்தப்பட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க போட்டியா குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் தேசிய நெடுஞ்சாலை நகர சாலை சந்திக்கும் இருமுனை சந்திப்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட சிறுவர் பூங்கா அமைந்துள்ளது.


இந்த சிறுவர் பூங்கா சில மாதங்களுக்கு முன்பு தான் பேரூராட்சி மூலம் சீரமைத்து புதுப்பித்தார்கள் இருந்தும் சிறுவர்கள் விளையாட யாரும் பூங்காவிற்கு வராமல் அச்சப்படுகின்றனர் காரணம் அதில் இருக்கும் மின் உயர் அழுத்த கம்பம் எந்நேரத்திலும் இரண்டாக உடைந்து விழும் அபாயம் இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவிற்கு யாரும் பொழுதுபோக்கை கழிக்க விளையாட வருவதில்லை மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் பள்ளி மாணவர் மாணவிகளும் நடந்து செல்லும் பாதசாரிகளும் உடைந்து இருக்கின்ற உயர் மின்னழுத்த கம்பத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே தினம் தினம் நடுநடுங்கி செல்கின்றனர், ஆகையால் உயிர் பலி வாங்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகமோ அல்லது குறிஞ்சிப்பாடி மின்சாரத்துறை அதிகாரிகளோ புதிய மின்கம்பம் அமைக்க உடனடியாக காலம் தாழ்த்தாமல் புதிய உயர் மின்னழுத்த கம்பம் நடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் சிறுவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை வைக்கின்றனர். 

No comments:

Post a Comment