பாலியல் வன்முறைக்கு போதைப் பழக்கத்திற்கு எதிராக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 26 September 2022

பாலியல் வன்முறைக்கு போதைப் பழக்கத்திற்கு எதிராக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பாலியல் வன்முறைக்கு  போதைப் பழக்கத்திற்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாட்டை ஒட்டி கடலூரில் நேற்று காலை ஏழு முப்பது மணிக்கு டவுன் ஹால் அருகில் மினி மாரத்தான் போட்டி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார் மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் தேன்மொழி வரவேற்புயுரை நிகழ்த்தினார்


சில்வர் பீச்சில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் மாவட்ட செயலாளரை மாதவி முன்னிலையில் நடைபெற்றது, குடியிருப்போர் சங்க தலைவர் பி. வெங்கடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மினி மராத்தான் போட்டியில் கலந்து கொண்டார்கள்.


கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா   அனைத்திந்திய ஜனநாயக மதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கிரிஜா  துணை மேயர் தாமரைச்செல்வன் திமுக மாநகர செயலாளர் ராஜா மூத்த வழக்கறிஞர் சிவமணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் குடியிருப்போர் சங்க பொது செயலாளர் மருதவாணன் மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் அமர்நாத்  நகர செயலாளர் சாந்தகுமாரி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment