வடலூர் நகராட்சியில் பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு பொது மக்கள் நன்றி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 September 2022

வடலூர் நகராட்சியில் பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு பொது மக்கள் நன்றி.


திமுக ஆட்சி பெற்று தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதும் தமிழக மக்களின் நலன் காக்க பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.


இதனை தொடர்ந்து கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகம் முழுவதும் உள்ள பல பேருராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு சட்டசபையில் 110 வீதியின் கீழ் அறிவிக்கப்பட்டது


கடலூர் மாவட்டத்தில் வடலூர் மற்றும் திட்டக்குடி பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடபட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தேர்தலில்  வடலூர் நகராட்சியின்  தலைவராக சிவக்குமார் அவர்களும் துணை தலைவராக சுப்புராயலு அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.


மேலும் வடலூர் நகராட்சியாக தரம் உயர்த்த பட்டதும் வார்டுகள் அதிகரிக்கப்பட்டு 27 வார்டுகளாக விரிவுபடுத்தபட்டது மேலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 27 வார்டுகளையும் திமுக கைப்பற்றி வெற்றி பெற்று சாதனை படைத்தது
வடலூர் நகராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர்.


அதிலூம் குறிப்பாக கடந்த வாரம் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர் மன்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய குடிநீர் இணைப்பிற்கான வைப்புத் தொகை குறைப்பு ,சாலை அமைத்தல், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்வேல் அமைத்தல் மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் வடிகால் அமைத்தால் , தெருவிளக்கு அமைத்தால் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்த திர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் முயற்சியால் வடலூர் சத்திய ஞான சபை வளாகத்தில் சார்வேதேச பூங்கா அமைத்தால் மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைக்க பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


பல எண்ணற்ற திட்டங்களை செய்து வள்ளலார் கூறியது போல் வடலூரும் கடலூராகும் என்பதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வரும் அமைச்சர் அவர்களுக்கு வடலூர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment