அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் பிற துறை பணிகள் ஒருங்கிணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 September 2022

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் பிற துறை பணிகள் ஒருங்கிணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது!!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள எறும்பூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிறதுறை பணிகளை ஒருங்கிணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.


எறும்பூர்  அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு எறும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா தாஸ் தலைமை தாங்கினார்  தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்றார் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் வருவாய் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ ஒன்றிய பொறியாளர் வசந்த், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சரண்யா எஸ். பி. எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி சுக்கட்டுப்பாட்டு வாரியம்உதவி பொறியாளர்  சரண்யா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பொன்மணி, சுகாதாரத்துறை ஒருங்கிணைப்பாளர் சதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த சிறப்பு முகாமில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு  அறிவுரைகள் சுற்றுப்புற சூழல் தூய்மை சுகாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துரை வழங்கப்பட்டது மேலும் நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக அனைவருக்கும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் கீழ் மஞ்சப்பை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் பால கணபதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment