சிதம்பரத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தினம் முப்பெரும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

சிதம்பரத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தினம் முப்பெரும் விழா.

சிதம்பரம்  தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தினம் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமை தாங்கினார்.எம்.கோவிந்தராஜ் பி.பாலகுரு ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க செயலாளர் ஆர்.இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். நகரசெயலாளர் பி.முத்துக்குமார் ஆண்டறிக்கை வரவு செலவு கணக்கை வாசித்தார்.


முன்னதாக சின்ன செட்டித்தெரு விஸ்வகர்மா கொடி கம்பத்தில் சங்க துணை தலைவர் பி.பாலகுரு பந்தர் மந்தக்கரையில் ஆர்.மாரியப்பன் கோயில் வளாகத்தில் எம்.கோவிந்தராஜ் ஆகியோர் சங்க ஐவண்ண அனுமன் கொடியை ஏற்றி வைத்தனர். ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி விக்ரகங்களுக்கு ஆராதனை செய்யப்பட்டது.


10ம் வகுப்பு 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விஸ்வகர்மா கல்வி சேவைக்குழு சார்பாக கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கப்பரிசும் சான்றிதழையும் சங்க மாநில தலைவர் ஜி.சேகர் வழங்கி விஸ்வகர்மா தின வாழ்த்துகளை கூறி சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் எஸ்.ரமேஷ் தொழிற்சங்க செயலாளர் ஆர்.இராமச்சந்திரன் எம்.பாலசுப்பிரமணியன் எம்.சுரேஷ் ஆர்.மாரியப்பன் ஆர்.தில்லைநடராஜன் ஜி.முருகன் ஆர்.உமாபதி ஆர்.கனகசபை கே.பாலாஜி ஜி.வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


நிறைவில் நகர பொருளாளர் எஸ்.ராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற ஸ்ரீ விஸ்வகர்மா தினம் முப்பெரும் விழாவில் 10 ம்வகுப்பு 12 ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி ஊக்கப்பரிசை சங்க மாநில தலைவர் ஜி.சேகர் வழங்கிய போது எடுத்த படம்.உடன் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

No comments:

Post a Comment