சாத்தப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 June 2022

சாத்தப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்

சாத்தப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது



கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது .சாத்தப்பாடி இ சேவை மைய கட்டிட  வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரீ கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.முதுநிலை வருவாய் ஆய்வாளர் சஞ்சய் வரவேற்றார்.  புவனகிரி வட்டாட்சியர் ரம்யா முன்னிலை வகித்தார் .


முகாமில் கூட்டத்திற்காக பெறப்பட்ட 166 மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு 11 இலவச மனை பட்டா, 20 நபர்களுக்கு முதியோர் ஓய்வு ஊதியம், 20 நபர்களுக்கு குடும்ப அட்டை, பட்டா மாற்றம் 41  நபர்களுக்கும்  சலவைப் பெட்டி 1 நபருக்கும் , தையல் இயந்திரம் 4 நபர்களுக்கும் , வேளாண் இடுபொருட்கள் 5 நபர்களுக்கும் , தோட்டக்கலைத் துறையில் 3 நபர்களுக்கும்  நலத்திட்ட உதவிகள்  ரூபாய் 4,72,503 மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் சித்ரா ,மண்டல துணை வட்டாட்சியர் ரத்தினகுமார், வட்டாட்சியர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர்கள்,  கிராம நிர்வாக அதிகாரிகள் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலர்  பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சி ஏற்பாட்டினை சாத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

*/