கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் அக்னி பாத் திட்டத்தை வாபஸ் வாங்கிடவலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜாகிர் உசேன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கவட்ட தலைவர் மணிகண்டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட குழு உறுப்பினர்கள் புகழேந்தி சிங்காரவேலு மற்றும் நகர் குழு உறுப்பினர் மணிகண்டன் கிளைச் செயலாளர் குமார் இளங்கோவன் தேசிங்கு தனபால் மணிகண்டன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்
முன்னதாக ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சேத்தியாதோப்பு டிஎஸ்பி சுந்தரம் உத்தரவின்பேரில் காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது
செய்தியாளர் கே.பாலமுருகன்

No comments:
Post a Comment