அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அகில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அகில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம்.

ராணுவத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக நான்கு ஆண்டுகளுக்கு பணியாற்றுவதற்கு அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது 


நான்காண்டுகள் கால பயிற்சியில் முடிவெட்ட செருப்பு தைக்க சொல்லித் தருவார்கள் அதை வைத்துக் கொண்டு பிழைப்பு தேடி கொள்ளலாம் என ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார் இதை கண்டித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் நிலையில் பழைய முறையில் ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் ஜவான் பவன் அருகில் மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டம் நோக்கங்களை விளக்கி மாவட்ட செயலாளர் கோ. மாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், சுப்பராயன், ராஜேஷ், கண்ணன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆளவந்தார், பக்கிரான் ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் சிப்காட் செயலாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்

No comments:

Post a Comment

*/