கடலூரில் இந்து அறநிலையத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

கடலூரில் இந்து அறநிலையத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

கடலூரில் இந்து அறநிலையத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர் மனுவில் கூறியதாவது சிதம்பரம் நடராசர் கோவில் தொடர்பாக, விசாரனை குழுவிடம் கீழ் கண்டவாறு எனது ஆலோசனைகளை முன் வைக்கின்றேன்.

காசி விஸ்வநாதர் ஆலயத்தை அரசே ஏற்று நடத்தியது போல சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அரசே ஏற்று நடத்த தமிழக அரசு சட்டம் இயற்றிட வேண்டும்



1. தமிழகத்தின் பிறகோவில்களில் உள்ளது போன்று உண்டியல் வைத்து பக்தர்களிடம் காணிக்கை பெற வேண்டும்.


2. அனைத்து விதமான பூசை, அர்ச்சனைகளுக்கும் உரிய ரசீது தரப்பட வேண்டும்.

 3.சிற்றம்பல மேடையில் நின்று நடராசனை தரிசிக்க கட்டணம் வசூலிக்க கூடாது.


 4. ஒவ்வொரு சன்னதியிலும் பூசை செய்யும் தீட்சித அர்ச்சகர்கள் பெயர் கோவில் அலுவலக

வளாகத்தில் ஒட்டப்பட வேண்டும்.



5.பிற கோவில்களில் உள்ளது போல் அங்கீகரிக்கபட்ட தரமான பிரசாத கடைகள் அமைக்க வேண்டும்.


6.நடராசர் கோவிலுக்கு சொந்தமாக உள்ள நகைகள் பட்டியல். நிலங்கள் மற்றும் சொத்து விபரங்களை அதிகார பூர்வமாக இணைதளத்தில் வெளியிட வேண்டும்.


7.கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளை கேட்கவும், அதை நிவர்த்தி செய்யவும் உரிய அலுவலரின் பெயர் மற்றும் போன் நம்பரை பக்தர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


8. கோவிலில் பணிபுரியும் தீட்சிதர்களுக்கு அவரவர் வேலைகளுக்கு ஏற்ப உரிய மாதம் ஊதியம் மற்றும் சட்டப்படியான பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும்.


9. தினமும் சிற்றம்பல மேடையில் ஒவ்வொரு கால பூசையின் போதும் தேவார திருமுறைகளை இனிமையான குரலில் பாடும் வகையில் ஓதுவார்களை போதுமான ஊதியம் கொடுத்து 

பணியமர்த்த வேண்டும்.


10.பரம்பரை வாரிசுரிமை படியான பணிநியமனம், நிர்வாக முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டது.

சிதம்பரம் கோவிலில் மட்டும் பரம்பரையாக தீட்சிதர்கள் நிர்வாகம் ஒழிக்கப்பட வேண்டும்.


 11. அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் சிதம்பரம் நடராசர் கோவிலுக்கும் நியமிக்கப்பட வேண்டும்.


12. சிதம்பரம் நடராசர் கோவிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்.


13. காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்குகள் உள்ள தீட்சிதர்கள் கோவில் பூசை நிர்வாகத்திலிருந்து உடனடியாக தடுக்கப்பட வெண்டும். பட்டியலை உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராசர் கோவில் இதுவரை நிர்வாகம் செய்துவந்த தீட்சிதர்களால் ஏற்பட்ட விளைவுகள் குறிப்பாக வருமான இழப்பு. சொத்துக்கள் இழப்பு, பக்தர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்கள் கோவிலுக்கு நன்கொடை வழங்கிய பெரும் செல்வந்தர்கள் குறித்தும் அதன் வரவு செலவு குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்.

மனுக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாநிலக்குழு உறுப்பினர்  எஸ் ரமேஷ் பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன் சுப்பராயன் ராஜேஷ் கண்ணன் கடலூர் மாநகர செயலாளர் அமர்நாத் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா சிதம்பரம் நகராட்சி துணைத்தலைவர் முத்துக்குமரன் கடலூர் ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயசித்ரா ஆளவந்தார்உள்ளிட்டோர் கலந்து கொண்டு தனித்தனியாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியிடம் மனு அளித்தனர்

No comments:

Post a Comment

*/