விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் முன்பு மோடியின் விலையில்லா உணவகம் வழங்கும் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மே1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் ஆலயம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மணியழகன் தலைமையில், மாவட்ட தலைவர் மணிகண்டன் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹச்.ராஜா கலந்து கொண்டு மோடியின் விலையில்லா உணவகத்தை திறந்துவைத்தார்.
அதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜாவிற்கு விருத்தாசலம் பாலகரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment