காட்டுமன்னார்கோவில் அருகே கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி துணை அதிகாரியை காலணியால் தாக்கிய ஊராட்சி மன்ற துணை தலைவர் பரபரப்பு.!!!
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்றத்தலைவர் சிவகாசி கலியமூர்த்தி தலைமை தாங்கினார் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா கிராம நிர்வாக அலுவலர் ராஜம் ஊராட்சி செயலாளர் சங்கர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்பு ஊராட்சியில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது குறித்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா திடீரென தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சரமாரியாக தாக்கினார் இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்த உடனடியாக காட்டுமன்னார்கோயில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஏழுமலை மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திகையும் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
திடீரென கிராம மக்கள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரண்யாவை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.
பின்பு சேத்தியாதோப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தரம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரண்யா ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊராட்சிமன்றத் துணைத் தலைவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யாவை கைது செய்தனர் கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரியை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செருப்பால் அடித்த விவகாரம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் பதற்றம் நிலவியது இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


No comments:
Post a Comment