சிதம்பரத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் காவலர் தற்கொலை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

சிதம்பரத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் காவலர் தற்கொலை

சிதம்பரத்தில்  பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் காவலர் தற்கொலை.


சிதம்பரத்தில் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சிதம்பரம் அருகே உள்ள சேந்திரகிள்ளை கிராமத்தை சேர்ந்த பெரியசாமி ஆயுதப்படை காவலர் கடந்த 6ம் தேதி முதல் சிதம்பரம் தனியார் பள்ளியில் விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்த இவர் அதிகாலை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சத்திகணேசன் சிதம்பரம் டிஎஸ்பி ராஜேஷ் ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலருக்கு ஜூன் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

*/