சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை 1987 முதல் 2019 வரை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 April 2022

சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை 1987 முதல் 2019 வரை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை 1987 முதல் 2019 வரை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை சார்பாக பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தாவரவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் நடைபெற்றது.

இதில் தாவரவியல் துறை இணை பேராசிரியர்கள் ஜெ.பிரபாகரன் வரவேற்றார் துறை தலைவர் க.காந்தியப்பன் தலைமை உரை ஆற்றி கல்லூரியின் தாவரவியல் துறையின் வளர்ச்சி பற்றி பேசினார், கல்லூரியின் முதல்வர் நா.சாந்தி தாவரவியல் படிப்பு மற்றும் தாவரங்களின் முக்கியத்துவம் பற்றி சிறப்பு உரையாற்றினார் உதவி பேராசிரியர் த.கோவிந்தன் தொகுத்து வழங்கினார். 

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த கல்லூரி நாட்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர் மேலும் கல்லூரி மற்றும் தாங்கள் படித்த தாவரவியல் துறையின் வளர்ச்சி தங்களின் பங்களிப்பை செய்வதாக கூறினர்.

நிகழ்ச்சியில் கலந்துக் கண்டவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடுகளை துறையின் முன்னாள் மாணவர்கள் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் மற்றும் சிதம்பரம் அரிமா பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின்  கல்லூரியின் நாட்களை நினைவு கூர்ந்தனர் முடிவில் இணை பேராசிரியர்கள் கோமதி நாயகம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் துறை பேராசிரியர் டி.வெங்கடேசன் ஹசீனாரபாத் து.கவிதா ந.சரஸ்வதி மற்றும் எ.சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு முன்னாள் மாணவர் மற்றும் இணைப்பேராசிரியர் பிரபாகரன் செய்திருந்தார்.இந்த நிகழ்ச்சியில் அதிக அளவில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களின் கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தனர்.



No comments:

Post a Comment

*/